40 வயது இயக்குனருடன் ரகசிய டேட்டிங்..! காதல் சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன் ஹீரோயின்!
தமிழில் இரண்டு படங்களே நடித்துள்ள பிரபல நடிகை, ஒருவர் 40 வயது இயக்குனரின் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தற்போது கட்டம் கட்டி நடித்து வரும், நடிகை அனு இமானுவேல் தான் இந்த காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர் இயக்குனர் மிஷ்கின், விஷாலை வைத்து இயக்கிய 'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இவர், தமிழில் தருண் - திரிஷா நடிப்பில், கடந்த 2003 ஆண்டு வெளியான 'உனக்கு 20 எனக்கு 18 ' படத்தை இயக்கிய இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவை காதலிப்பதாக கிசுகிசு எழுந்துள்ளது.
தற்போது தெலுங்கில் பிசியான இயக்குனராக இருந்து வரும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் 'ஆக்சிஜன்' படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டதாக தெலுங்கு வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் ஜோதி கிருஷ்ணா '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் நடிகர் ரவி கிருஷ்ணாவின் சகோதரர், இவர்கள் இவருவரும் பிரபல தயாரிப்பாளர், ஏ.எம் ரத்னம் அவர்களின் மகன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை இது குறித்து அனு இமானுவேல் மற்றும், ஜோதி கிருஷ்ணா இருவருமே வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.