"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். மருத்துவ படிப்பு சம்பந்தமான இந்த படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 

இந்நிலையில் சோசியல் மீடியாவில் "தளபதி 65" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் 65வது படமான அதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், அட்லீ ஆகிய இயக்குநர்களில் யாராவது ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

இதனிடையே தீபாவளி ட்ரீட்டாக வெளியான பிகில் படத்தின் விசில் சத்தம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 300 கோடி வரை வசூல் செய்துள்ள பிகில் திரைப்படம், அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது. எனவே தளபதி விஜய் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. 

மார்க்கெட்டில் தற்போது சூப்பர் ஸ்டாருக்கு இணையாக மவுசு அதிகரித்துவிட்டதால், ரஜினி அளவிற்கு சம்பளம் வேண்டுமென கேட்டுள்ளாராம் தளபதி. எவ்வளவு தெரியுமா ? 100 கோடி ரூபாய் கேட்டிருக்கிறாராம். என்னதான் இருந்தாலும் ஒரேடியாக சூப்பர் ஸ்டார் அளவிற்கு சம்பளம் கேட்பதெல்லாம் ரொம்ப ஓவர் என தயாரிப்பாளர் தரப்பு சலித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கால்ஷீட் வேணும்னா காசு கொடுத்து தானே ஆகனும் பாஸ்.