"மாஸ்டர்" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் புரோமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதுபோதாது என்று ஐ.டி.ரெய்டு மூலமாகவும், பாஜகவினரின் போராட்டத்தாலும் 'மாஸ்டர்' படத்திற்கு இலவச விளம்பரங்கள் வேறு எக்ஸ்ட்ராவாக கிடைத்துள்ளன.

அமைதியாக நெய்வேலியில் ''மாஸ்டர்'' பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை வாண்டடாக வண்டியில் ஏத்தி வந்த வருமான வரித்துறையினர், சென்னையில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விஜய்யின் அரசியல் போக்கு பிடிக்காமல் திட்டமிட்டே ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டதாக ரசிகர்கள் பட்டாளம் கொந்தளித்தது. 

இந்நிலையில் ''மாஸ்டர்'' படத்தின் ஆடியோ லாஞ்ச் அன்று ஐ.டி.ரெய்டில் உள்ள அரசியல் குறித்து விஜய் குட்டி கத சொல்வார் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். இதனிடையே ஏற்கனவே அறிவித்திருந்த படி காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ''குட்டி கத'' லிரிக் வீடியோவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் விஜய். 

அது எப்படின்னா... 'லெட் மீ சிங்க குட்டி ஸ்டோரி' என்று தொடங்கும் அந்த பாடலில், டிசைன், டிசைன்னா பிராப்ளம் வந்தாலும் அதை பற்றி கண்டுக்க கூடாதுன்னு ஜாடை மாடையாக ஐ.டி.ரெய்டு பற்றி விஜய் சொல்லியிருக்குறதா தளபதி ஃபேன்ஸ் கொண்டாடி வருகின்றனர். 

அதேபோல, சோசியல் மீடியாவில் விஜய்யை வச்சி செய்வது எப்பவுமே நம்ம தல ஃபேன்ஸ் தான். அதையும் நாசுக்காக சுட்டிக்காட்டியுள்ள விஜய், ஹேட்டர்ஸ் எப்பவுமே வெறுக்க தான் செய்வாங்க... அதையெல்லாம் தள்ளிவச்சிட்டு நம்ம கனவ நோக்கி போய்கிட்டே இருக்கனுன்னு சொல்லியிருக்கார். 

அதேபோல விஜய்க்கு ஒண்ணுனா முதல்ல பொங்குறது அவங்க ரசிகர்கள் தான். இவ்வளவு சொன்னவர் அவங்களுக்கு அட்வைஸ் பண்ணாமல் போயிடுவாரா? "லைப் இஸ் வெரி சாட் நண்பா... பீ ஹேப்பி" சொல்லியிருக்காரு. அப்புறம் என்னப்பா தளபதியே சொல்லிட்டாரு ஜாலியா இருக்க....!