'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும் 'வலிமை' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான மாஸ் சண்டைகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அனல் பறக்க ஷூட் செய்யப்பட்டது. மிகவும் ரிஸ்கான சண்டை காட்சிகள் அஜித் டூப்பில்லாமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: படுக்கையறையில் ஓவர் நெருக்கம்...போட்டோ வெளியிட்டு மிரட்டும் காதலன்...சீரியல் நடிகையின் கள்ளக்காதல் பஞ்சாயத்து!

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அஜித் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கடற்கரையில்... டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு... ரசிகர்களை வெறியேற்றிய "நாகினி"...!

படத்தின் கதை என்ன, அஜித்திற்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் போன்ற தகவல்களை படக்குழுவினர் பரம ரகசியமாக வைத்துள்ளனர். நயன்தாரா, நஸ்ரியா, ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி என அஜித்துக்கு ஜோடியாக உள்ளதாக பல நடிகைகளின் பெயர்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன. 

இதையும் படிங்க: சனம் ஷெட்டியை தர்ஷன் கழட்டிவிட காரணம் இதுதான்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

இந்த சமயத்தில் வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக பாலிவுட் நடிகர் ஒருவரது பெயர் அடிபடுகிறது. புதிதாக வரும் தகவல் என்னவென்றால் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்பட வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் வலிமை படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.