சரத்குமார் மாயி படத்தில் வடிவேல் பெண் பார்க்க போகும் சீன் நியாபகம் இருக்கா?... கண்டிப்பா நியாபகம் இருக்கு... ஏன்னா அந்த படத்தோட ஹைலைட்டே அந்த காமெடி சீன் தானே. அதில் அப்பா கேரக்டர் வாம்மா மின்னல் என்றதும்... சரக்குன்னு வந்துட்டு பரக்குன்னு போவாறே அதில் நடித்த நடிகையின் பெயர் தீபா. மாயி படத்தால் பிரபலமானதால் அவருக்கு மின்னல் தீபா என்ற பட்டப்பெயரே உண்டு. 

அதற்கு அடுத்து விஜய்யின் தமிழன், மாதவனின் ரன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலின் படப்பிடிப்பில் இருந்த தீபாவை, ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கே வந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இழுத்து போட்டு அடித்ததாக தகவல்கள் தீயாய் பரவின.

இதுகுறித்து விளக்கம் அளித்த தீபா, நானும் எனது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்போது பிரிந்துள்ளோம். அதை பயன்படுத்திக் கொண்டு எங்களது குடும்ப நண்பர் ஒருவர் என்னை டார்ச்சர் செய்கிறார். ஒருகட்டத்தில் அத்துமீறி ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கே வந்து என்னை அடித்து, எனது செல்போனையும் உடைத்துவிட்டார் என்று கதறினார். 

தீபா கூறும் அந்த குடும்ப நண்பரின் பெயர் சிட்டி பாபு. தீபா சொல்லும் காரணங்களை மறுக்கும் அவர், நானும் தீபாவும் காதலித்தோம், ஓவர் நெருக்கமாக எல்லாம் இருந்திருக்கிறோம். நான் எனது நண்பர்களுடன் பழகுவது பிடிக்காமல் தீபா என்னை டார்ச்சர் செய்தார். அதனால் நான் விலகிவிட்டேன். இப்போது நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறி கதறி அழுகிறார் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார். 


ஏற்கனவே இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியலில் நடித்த ஈஸ்வர் - மகாலட்சுமி இடையே உருவான கள்ளக்காதல் பஞ்சாயத்து சின்னத்திரையில் பரபரப்பை கிளப்பியது. அது சற்று அடங்கிய நிலையில், இப்போது புது பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்குகிறது.