Asianet News Tamil

“ஸ்டுடியோவை விட்டு வெளிய போடா”.... ஆயிரம் ரூபாய்க்காக ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் இவரா?

ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து நடந்தே வெளியே வந்தேன். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பிறகு உழைக்கத் தொடங்கினேன். 

Do you know which producer is insulted Rajinikanth for 1000 RS Super Star Sad flashback in Darbar Audio Launch
Author
Chennai, First Published Jul 1, 2020, 2:00 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனி அடையளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் அதிக அவமானங்கள் மற்றும் துரோகங்களை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு தர்பார் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமாவிலும் சந்தித்த பல கஷ்டங்களை பற்றி பேசினார். அதில் குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தன்னை அவமானப்படுத்தியது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது. 

 

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

அப்போது ‘பதினாறு வயதினிலே’ படம் வெளியாகி நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை தனது படத்தில் நடிக்க கேட்டார். நானும் ஓகே சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கி விடும். இப்போது என்னிடம் பணம் இல்லை, நாளை கொடுத்து அனுப்புகிறேன் என அந்த தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அந்த புரொடக்ஷன் மேனேஜர் பணம் கொண்டு வரவில்லை. அது பற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்ட போது நாளை சூட்டிங் வாங்க மேக்கப் போடுவதற்கு முன்பு தருகிறேன் என்று கூறினார். நானும் ஷூட்டிங்கும் சென்றேன். அங்கு நான் பணம் கொடுத்தால் தான் மேக்கப் போடுவேன் என்று கூறினேன். அப்போது ஒரு ஒயிட் அம்பாசிட்டர் கார் வேகமாக வந்து என் பக்கத்தில் நின்றது, அதில் இருந்து இறங்கிய தயாரிப்பாளர் எடுத்த உடனே, என்னடா நீ பெரிய ஹீரோவா, இப்ப தான் வந்திருக்க 4, 5 படம் பண்ணியிருக்க... பணம் கொடுக்கலைன்னா மேக்கப் போடமாட்டியா?.

 

இதையும் படிங்க:  படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

கேரக்டர் கிடையாது ஒன்னும் கிடையாது போடா என சொன்னார். நானும் போகிறேன் கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு நீ நடந்து போ, கொடுக்க முடியாது என கூறினார். அப்போது என்னிடம் பணம் கிடையாது. ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து நடந்தே வெளியே வந்தேன். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பிறகு உழைக்கத் தொடங்கினேன். பின்னர் என் வாழ்க்கையில் முன்னேறி பாரின் கார் வாங்கி, பாரின் டிரைவரோடு அதே ஸ்டுடியோவிற்கு சென்றேன். அந்த புரோடியூசர் எங்கே கார் நிறுத்துவாரோ அதே இடத்தில் என் காரை பார்க் செய்தேன் என கூறியிருந்தார். 

 

இதையும் படிங்க:  “சத்தியமா விடவே கூடாது”.... சாத்தான்குளம் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்...!

அப்படி ஆரம்ப காலத்தில் ரஜினியிடம் மிகவும் மோசமாக பேசி அவரை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் டி.என். பாலு எனக்கூறப்படுகிறது. நடிகர் கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கி, தயாரித்த சட்டம் என் கையில் படத்திற்காக தான் ரஜினியை நடிக்க அழைத்ததாகவும், அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் சத்யராஜ் நடித்ததும் தெரிய வந்துள்ளது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios