விஜய் தொலைக்காட்சி என்றாலே ஹிட்டு தான் என சொல்லும் அளவிற்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது. முழுக்க, முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது. சீரியல், காமெடி, நடனம், பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கும் வேற லெவல். ‘கலக்கப்போவது யாரு’, ‘சூப்பர் சிங்கர்’, ‘கே.பி.ஒய் சாம்பியன்ஸ்’, ‘எங்க கிட்ட மோதாதே’ என நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, ‘மெளன ராகம்’,‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’,‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’,‘சரவணன் மீனாட்சி’ என பல சீரியல்களும் இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளன. 

பல்வேறு வித்தியாசமான வெற்றி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டி.வி. இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் நோக்கத்துடன் முழுக்க, முழுக்க மியூசிக்கிற்காக புது சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. புது சேனலுக்கான தொடக்க விழா கடந்த 4ம் தேதி நடந்த பிக்பாஸ் சீசன் 4 தொடக்க நிகழ்ச்சியில் நடைபெற்றது. பிக்பாஸ் மேடையில் உலக நாயகன் கமல் ஹாசன் விஜய் மியூசிக் சேனலுக்கான லோகோவையும், “ஜிகிலுஜிகிலு” அனிமேஷன் விளம்பரத்தையும் வெளியிட்டார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நாயர்கள் மற்றும் த்ரிஷா, நயன்தாரா என முன்னணி நாயகிகளும் அனிமேஷன் வடிவில் ஆட்டம் போடும் அந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மற்ற மியூசிக் சேனல்களைப் போல் ஆங்கர் வந்து பிளேடு போடுவது எல்லாம் இதில் கிடையாது. அதற்கு பதிலாக இரு காமெடி அனிமேஷன் கதாபாத்திரங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இங்க நீங்க முழுக்க, முழுக்க உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு என்ஜாய் பண்ணலாம். 

 

இதையும் படிங்க: “அப்பா, அம்மா இரண்டு பேருமே சரக்கடிச்சிட்டு”... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்.. கட்டியணைத்து தேற்றிய ஹவுஸ் மேட்ஸ்...

தமிழ் சினிமாவின் ஹிட்டு பாட்டு, குத்து பாட்டு என இளம் தலைமுறைக்கு பிடித்த அனைத்து விதமான பாடல்களும் விஜய் மியூசிக் ஒளிபரப்படும். வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், விஜய் மியூசிக் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் இடமாகவும் மாற உள்ளது. நடனம் மற்றும் இசை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக 'எங்கா புலிங்கோலாம் பயங்காரம்', 'கண்ணா பாட்டு பாட ஆசையா' ஆகிய நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. அதேபோல் மக்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விஜய் மியூசிக்கில் 'பிக்பாஸ் வேற லெவல் ஃபன்' என்ற புதிய நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் மனம் கவர்ந்த திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே எண்டர்டெயின்மெண்ட்டில் கொடிகட்டி பறக்கும் விஜய் தொலைக்காட்சி தனது மியூசிக் சேனலில் அறிமுகப்படுத்த உள்ள நிகழ்ச்சிகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Promo video: