பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருப்பவர் பாலாஜி முருகதாஸ். அவர் 2018ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர். இதற்கு முந்தைய வருடம் ஃபைனல் வரை சென்றாலும் ஜெயிக்காத நிலையில். 2018ல் டைட்டில் வென்றார். இருப்பினும் இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படவில்லை. தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து தெரிவித்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பு பாலாஜி முருகதாஸ் தனது வாழ்க்கையைப் பற்றி கூறி கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. என் அப்பா, அம்மா பள்ளியில் சேர்த்துவிட்டதோட சரி, பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு கூட வந்தது கிடையாது. என்ன என்று எழுந்து பார்ப்பேன். அருகில் அப்பா கைகளில் கேஸ் ட்யூப் வைத்து நின்றிருப்பார். அப்போது தான் நான் உணர்வேன் அவர் என்னை அடித்திருக்கிறார் என்று. அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் போதைக்கு.. உங்களால் குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் குழந்தை எதற்காக பெற்றுக்கொள்கிறீர்கள்" என கூறி பாலாஜி கதறி அழுகிறார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

உடனடியாக ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஓடிவந்து கண்ணீர் விட்டு அழும் பாலாஜியை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர் சண்டைகளுக்கிடையே இப்படியொரு உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது பார்வையாளர்களின் மனதை பாரமாக்கியுள்ளது. இதோ அந்த வீடியோ...