Do you know the only one who plays a Tamil film?

“கார்கில்” என்ற படத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நடிக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘கார்கில்’ என்ற படத்தை சிவானி செந்தில் இயக்கி வருகிறார். இந்தப் படம் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறியது:

‘‘சென்னையிலிருந்து பெங்களூர் வரை காரில் செல்லும் ஒருவர் மட்டுமே நடிக்கும் கதையாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டது.

அப்பாத்திரத்தில் ஜிஷ்னு நடித்திருக்கிறார். சில நிமிடங்களுக்கு மட்டுமே ஹீரோயின் இருந்தால் போதும் என்ற நிலையில் தான் நடிகை பிரேமாவை தேர்வு செய்து நடிக்க வைத்தோம்.

இக்காட்சி முடிந்ததும் அவருடன் போனில் உரையாடுவது போல் தான் மற்ற காட்சிகள் இருக்கும்.

படத்தில் குறைந்தபட்சம் நாலு பாட்டு, நாலு காட்சிகளாவது இருந்தால் தான் ஹீரோயினாக நடிப்பேன் என்பார்கள் பல நடிகைகள். ஆனால் ‘கார்கில்’ படத்தில் நடிகை பிரேமா சில நிமிடம் மட்டுமே நடிக்க சம்மதித்தது எனது லக்.

இந்தப் படத்திற்கு கணேஷ் பரம ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் பாய் இசையமைத்துள்ளார்.

படத்தை சுபா செந்தில் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் பாடல்களை சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்” என்று அவர் கூறினார்.