இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறைமாத கர்ப்பிணியாகவும், மகனை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் தாயாகவும் பல பரிணாமங்களில் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி “பெண்குயின்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 22 நிமிடம் 33 விநாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரை இதுவரை 11 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

இதையும் படிங்க:  சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...!.

இந்த படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு டிரெய்லரை தனுஷ், மோகன்லால், நானி ஆகியோர் வெளியிட்டனர். டிரெய்லர் ஆரம்பிக்கும் போதே நமக்குள் ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது. காணாமல் போன மகனை தேடி அலையும் அம்மாவாக கீர்த்தி சுரேஷ் பரிதாபமாக காட்சியளிக்கிறார். யாராலோ, எதற்காகவோ கடத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் மகன் உயிரோடு இருக்கிறாரா?, இல்லையா?என்ற பதற்றம் உருவாகிறது. இடை, இடையே காட்டப்படும் கொலைகாரனின் வித்தியாசமான உருவமும், பிரத்யேக திகில் மியூசிக்கும் படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆவலை தூண்டிவிடும் படி அமைந்தது. 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். அதன்படி படத்தில் மாஸ்க் அணிந்து வரும் வில்லன் கேரக்டர் யார் என்பதே படக்குழுவில் பணியாற்றும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்றும், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் தவிர பிறருக்கு தெரியாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த மாஸ்க் போட்ட வில்லன் யார் என்பதை கிளைமேக்ஸில் பார்க்கும் போது ஆடிப்போயிடுவீங்க என ட்விஸ்ட் வைத்துள்ளார்.