நேற்று ரிலீஸான விஜய்யின் 'பிகில்' படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் 25  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்த பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. மாஸ் படங்கள் மீது மட்டும் கண் வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், 'பிகில்'வெளியான சில மணி நேரங்களிலேயே அதனை இணையத்தில் கசியவிட்டது. ஏற்கெனவே படத்திற்கான நெகட்டீவ் கமெண்ட்ஸ் அதிகமாக வந்து கொண்டிருக்க, தமிழ் ராக்கர்ஸும் அதன் கைவரிசையை காட்டியதால் படத்தின் வசூலை எண்ணி தயாரிப்பாளர் தரப்பு கவலையுற்றது. 

இந்நிலையில் நேற்று வெளியான 'பிகில்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 'பிகில்' திரைப்படம் ஒரே நாளில் ரூ. 25 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 61 கோடி ரூபாய் வரை வசூல் பண்ணியிருக்கிறதாக தகவல் வெளியாகிருக்கு. சென்னையில் மட்டும் 'பிகில்' திரைப்படம் ரூ.1.75 கோடி வரை வசூல் செய்துள்ளது. சினிமா ரசிகர்களின் நெகட்டீவ் கமெண்ட்களால் என்ன ஆகுமோன்னு நினைச்ச 'பிகில்' திரைப்படம் நல்ல வசூலையே செய்திருக்கு. 

இதன் மூலம் முதல் நாள் ஓப்பனிங்கில் நன்றாக வசூல் செய்த ரஜினியின் '2.0', 'கபாலி', 'சர்க்கார்' படங்களின் வரிசையில் 'பிகில்' 4வது இடத்தை பிடிச்சிருக்கு. ஆனால் விஜய்யின் சர்கார் படத்தின் முதல் நாள் வசூலான ரூ.31.5 கோடியை முறியடிக்க முடியவில்லை. தீபாவளி சிறப்பு திரைப்படங்களின் வரிசையில் பிகில் மட்டும் ரிலீஸ் ஆகாமல், கார்த்தி நடிப்பில் உருவான 'கைதி' படமும் வெளியாச்சி. 'கைதி' படத்திற்கும் அதிக அளவில் திரையரங்குகள் கிடைச்சதும், ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்றதும் தான் 'பிகில்' பட வசூல் குறைய காரணமா கருதப்படுது.