do you know how many zeros are in baahubali collection
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடித்த ''பாகுபலி 2'' படம் உலக முழுவதும் சுமார் ரூ. 1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது பாகுபலி 2.
இந்த படத்தின் வெற்றியையும் வசூலையும் கண்டு பாலிவுட் மட்டுமின்றி இந்திய நடிகர்கள் மொத்தமாக அசந்து போயுள்ளனர். இந்த நிலையில் 'பாகுபலி - 2' வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூல் தொகையில் எத்தனை சைபர் இருக்கின்றது என்பதையே என்னால் எண்ண முடியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சச்சின் நடித்த 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
