அரசியலுக்கு வந்த பிறகு தனது சினிமா ரசிகர்களை நன்றாகவே குழப்புகிறார் கமல்ஹாசன். கட்சி துவக்கிய பின் ஒரு பேட்டியில் ‘இனி நடிக்க மாட்டேன்.’ என்றார். பின் அவரே இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் என  இரண்டு படங்களை லைக்கா தயாரிப்பில் கமிட் செய்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது ‘மருதநாயகம் படத்தை நிச்சயம் திரையில் பார்ப்பீர்கள். அதில் கமலுக்கு பதில் வேறு நடிகர் நடித்திருப்பார்! இனி நான் கண்டு வைத்திருந்த கனவுகளை எல்லாம் நல்ல நடிகர்களை வைத்து நிறைவேற்றும் கம்பெனியாக எனது ராஜ்கமல் இயங்கும். என் அரசியல் பயணத்தை பாதிக்காத வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன்.’ என்று கூறியிருக்கிறார். ஒரே வழவழா கொழகொழ போங்கள்!

*டோலிவுட்டில் தாறுமாறான ஹீரோயினாக விளங்கியவர் இலியானா. இருக்குதா இல்லையா?ன்னு தெரியாத அவரது இடுப்புக்காகவே பெரும் ரசிக கூட்டம் உண்டு. அதன் பின் பாலிவுட்டுக்கு போனவர், பெரிதாய் சோபிக்கவில்லை. இடையில் லவ் வேறு பிரேக் அப் ஆகிவிட்டது. 
இந்த நிலையில் மீண்டும் படங்களைக் கைப்பற்றுவதர்காக பொண்ணு பிகினியில் போட்டோக்களை எடுத்து, இன்ஸ்டாவில் சாத்தி எடுக்கிறது. 

*மணிரத்னம் இரு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் தற்போதைய நடிகர் பட்டாளத்தின் விபரம்....விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், பிரபு, மங்காத்தா அஸ்வின் என பெரும் பட்டாளம் இணைந்துள்ளது. 

*அஜித், விக்ரம்  என டபுள் ஹீரோ நடிப்பு, அமிதாப் பச்சன் தயாரிப்பு, ஜேடி ஜெர்ரி என இரட்டை இயக்குநர்களின் இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன் உருவான படம் ’உல்லாசம்’. ரகுவரனின் தரமான நடிப்பில், செமத்தியான இசை ஆல்பத்துடன் வந்த படம். பெரிதாய் ஓடாவிட்டாலும் கூட நன்றாக கவனம் ஈர்த்தது. இந்தப் படம் இப்போது அதே இயக்குநர்களால் மீண்டும் ரீமேக் ஆகிறது. அஜித் வேடத்தில் நடிப்பது பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. விக்ரம் வேடத்தில் நடிப்பது மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 

*அசுரன் படம் தமிழ் சினிமா உலகையும், தமிழ் அரசியலரங்கையும் தாண்டி அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். டோலிவுட்டிலும் இதனை தாணு தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சுரேஷ்பாவு இணைந்திருக்கிறாராம்.