Thammampatti Municipality election result  : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 11  வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது...

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 11 வார்டுகள், காங்கிரஸ் 2 வார்டுகள், அதிமுக 3 வார்டுகள் மற்றும் சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலையில் இல்லை, அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

சென்னையில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை திமுக 33 பாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது, அதில் அதிமுக 1 வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 1 வார்டில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. மற்ற எந்த இடத்திலும் அதிமுக முன்னிலையில் இல்லை, ஆனால் பாஜக சென்னையில் 5 வார்டுகளில் அதிமுகவை அடித்து ஒரங்கட்டி 2வது இடம் பிடித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 174 வது வார்டில் திமுக வென்றுள்ளது, ஆனால் இங்கு இரண்டாவது இடத்தை பாஜகவே பிடித்துள்ளது, இங்கு அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது 174 வது வார்டில் திமுக 6343 வாக்குகளும், பாஜக 1847 வாக்குகளையும், அதிமுக 1403 வாக்குகளைப் பெற்றுள்ளது. 4960 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் 54வது வார்டிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2வது இடம் பிடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிரிபுதிரி வெற்றியை பெற்று வருகிறது ..அந்தவகையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சியையும் திமுக தட்டி தூக்கியுள்ளது...