நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனரும், எழுத்தாளருமான, ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிப்ஸி'.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஒரு சில காரணங்களால் ரிலீசுக்கு காலதாமதம் ஆகி கொண்டே இருந்தது. தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை, தி.மு.க.தலைவர் ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சியை கண்டு ரசித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், திண்டுக்கல் பெரியசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து படம் பார்த்தனர்.

இந்த படத்தை பார்த்த பின், நடிகர் ஜீவாவையும், இயக்குனரையும் சந்தித்து மனதார பாராட்டி உள்ளார் ஸ்டாலின். ஏற்கவே தனுஷ் நடிப்பில் 'அசுரன்' படம் வெளியான போது, அப்படத்தை தூத்துக்குடியில் பார்த்த ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்த படத்தை பற்றியும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.