Asianet News TamilAsianet News Tamil

தீபாவளி முதல் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படும்…

Diwali to shut down theaters in six districts of Tamil Nadu
Diwali to shut down theaters in six districts of Tamil Nadu
Author
First Published Oct 4, 2017, 9:24 AM IST


தீபாவளி முதல் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கேளிக்கை வரி 30 சதவீத்திலிருந்து 10 சதவீமாக குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும், புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% வரியும் நிர்ணயிக்கப்பட்டு செப்டம்பர் 27-ஆம் தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.

ஏற்கனவே, தமிழ் திரைப்படங்களுக்கு 7% வரியும், மற்ற மொழி படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கேளிக்கை வரியை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது,

இந்த நிலையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios