Disqualified failure of the clash in the hoarding hunt
இந்தியா முழுவதும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியானது.
வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் படம் விடப்பட்டாலும், முதல் நாள் வசூல் 100 கோடி மேல என்று மார்த் தட்டிக் கொள்கின்றனர் படக்குழுவினர்.
டிக்கெட் விலையை 200, 500, 1000, 2000 என விற்றால் 100 கோடி இல்ல, 1000 கோடி கூட வசூல் செய்யலாம் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஓடுகிறது.
இப்போ பிரச்சனை அது இல்ல, சென்னையில் பாகுபலி 2 முதல் நாளில் மட்டும் 91.4 இலட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஆனால், இந்த வசூல், இளையதளபதி விஜய் நடிப்பில் போன வருடம் வந்த “தெறி” படத்தை விட குறைவு. அதுவும் 10 இலட்சம் ரூபாய் குறைவு.
என்னதான் பிரம்மாண்டம் என்று தெலுங்கு பாகுபலியை மிகைப்படுத்தி காட்டினாலும், வசூலை வேட்டையாடுவது தமிழ் “தெறி”களே.
