discount food in star hotel after watch kaala film
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை சென்னையில் பார்ப்பவர்களுக்கு சலுகை விலையில் உணவு தருவதாக சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான உணவருந்தலாம்.டிக்கெட்டை காட்டினால் உணவின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை நாளை முதல் 2 வாரங்களுக்கு உள்ளது.ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
