directors reject keerthi suresh

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து மெகா ஹிட் ஆன,'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து விட்டு, விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் இவர் தனுஷ் மற்றும் விஜயுடன் நடித்த இரண்டு படங்களுமே தோல்வியை தான் தழுவியது, தற்போது இவர் தமிழில் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கி வரும் 'மகாநதி' படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு பலர் சாவித்திரி வேடத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த, 'பாம்பு சட்டை' படம் நல்ல கதை மட்டும் அவருடைய நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஒரு கோடியாய் இருந்த தன்னுடைய சம்பளத்தை இப்போது இரண்டு கோடியாய் உயர்த்தியுள்ளாராம், மேலும் தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் பவன் கல்யாண் படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். 

மேலும் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் அனைத்து இயக்குனர்களும் 2 கோடி சம்பளத்திற்கு ஒத்து கொண்டால் தான் கதையை கேட்கின்றாராம், இதனால் பலர் 2 கோடி கொடுத்து நடிக்க வைக்கும் அளவிற்கு இது ஒர்த் இல்லை என்று வந்தவழியாகவே திரும்பி சென்று விடுகிறார்கள் என கூறப்படுகிறது.