பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடரில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன் என்று வளர்ந்து வரும் இளம் நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

நெட்பிளிக்ஸில் சைஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகே ஆப்தே ஆகியோர் நடித்து வெளிவரும் செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸின் முதல் எபிசோட் கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியானது. மும்பையை கதைக்களமாக வைத்து அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மோத்வானி இணைந்து இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ் மொத்தம் 8 மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு மணி நேரம் என்ற கணக்கில், 8 வாரங்களுக்கு இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாக உள்ள நிலையில், முதல் எபிசோடே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சைஃப் அலி சைஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகே ஆப்தே ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், இளம் நடிகை ஒருவர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ள காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குப்ரா சேட் என்ற இளம் நடிகை குக்கூ என்ற திருநங்கையாகவும், பாரில் டான்ஸ் ஆடுபவராகவும் நடித்துள்ளார். முதல் எபிசோடிலேயே செக்ஸ் காட்சிகளில் நவாசுதீன் சித்திக்கும், குப்ரா சேட்டும் சகஜமாக விளையாடியுள்ள நிலையில், குப்ரா சேட் நடித்த அந்த ஒரு முழு நிர்வாணக் காட்சிதான், இன்று பேசுபொருளாக உள்ளது.

திருநங்கையாகவும், நவாசுதீன் சித்திக்கின் காதலியாகவும் நடித்துள்ள அவரிடம், ‘இது எப்படி உங்களால் முடிந்தது’ என்ற கேள்வியை பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கேள்வியை மிகவும் துணிச்சலாக எதிர்கொண்ட அவரின் பதில் இதுதான்.

“நடிகர்கள் தேர்வுக்கு சென்றபோதே இயக்குநர்கள் அனுராக் காஷ்யப்பும், விக்ரமாதித்திய மோத்வானியும் நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கிறது என்றனர். காட்சிகளை படம்பிடிக்கும்போது உங்களுக்கு தெரியாது, ஆனால் அதை நீங்கும் பார்க்கும்போதுதான் எவ்வளவு அழகாக வந்துள்ளது என்பதை அறிவீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல டீம் கிடைத்துள்ளது என்றனர். இதை கேட்டதும் எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. நிர்வாணக் காட்சியில் நடிப்பது ஒன்றும் பெரிதல்ல என்றேன்.

ஆனால், உண்மையில், படப்பிடிப்பின்போது நான் அழத்தான் முடிந்தது. நான் நிர்வாணமாக இருக்கும் காட்சி 7 முறை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் காட்சி சரியாகவில்லை என்று கூறி மறுமுறை படம்பிடிக்க வேண்டும் என்றபோது எனக்கு அழுகை வந்தது. ஆனாலும், நான் நடிக்க மறுக்கவில்லை. என்னை புரிந்து கொண்ட இயக்குநர் கட்டியணைத்து எனக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால், உண்மையில் அந்த காட்சி முடிந்ததும் நான் அந்த அறையில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு இருந்த அனைவருமே கைத்தட்டி பாராட்டினார்கள்,  நானும் அந்த காட்சியை பார்த்தபோது, உண்மையிலேயே அழகாக இருந்தது. படத்தின் காட்சிகளுக்கு தேவையென்றால், இப்படிப்பட்ட நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது தப்பில்லையே” என்று கூறியுள்ளார் குப்ரா சேட்.

செக்ரெட் கேம்ஸ் தொடர் இன்னும் 7 வாரங்களுக்கு ஒளிபரப்பாக உள்ளது. குப்ரா சேட் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இன்னும் நிறைய செக்ஸ் காட்சிகள் இருக்கும்போல.