தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜயை வைத்து 'தலைவா', அஜித்தை வைத்து 'கிரீடம்', விக்ரமை வைத்து 'தெய்வத்திருமகள்' என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

தற்போதைய படங்கள்:

இந்நிலையில் தற்போது, நடிகர் பிரபுதேவாவை வைத்து 'லஷ்மி' மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து 'வாட்ச்மேன்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். 

காதல்:

இவர் விக்ரமை வைத்து, 'தெய்வத்திருமகள்' படம் இயக்கிய போது அந்த படத்தில் நடித்த நடிகை அமலபாலுக்கும் இவருக்கும் காதல்  மலர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து 'தலைவா' படத்திலும் விஜய்க்கு ஜோடியாக அமலா நடித்தார். 

திருமணம்:

ஆரம்பத்தில் இருவரும் காதலை மறுத்து வந்த நிலையில் பின், காதலை ஒப்புக்கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

விவாகரத்து:

இனிதாகவே தொடங்கிய இவர்களில் காதல் திருமணம் ஒரு வருடத்திலேயே, விவாகரத்தை நோக்கி சென்றது. இது குறித்து இயக்குனர் விஜய் கூறுகையில், 'நம்பிக்கை நேர்மை இல்லாத வாழ்வதில் பயன் இல்லை'. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம் என கூறியுள்ளார்.

நடிகை இது குறித்து கூறுகையில் 'நான் இப்போதும், விஜய் மீது அன்பு வைத்திருப்பதாகவும் ஒரு சில காரணங்களால் பிரிய முடிவு செய்துவிட்டேன் என தெரிவித்தார்'. 

இதனால் இருவரும் ஒருமனதாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து, அவரவர் தொழில் ரீதியாக கவனம் செலுத்த தொடங்கினர்.

விஜய்க்கு இரண்டாவது திருமணம்:

இந்நிலையில் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். மேலும் இத்தனை நாட்கள் இரண்டாவது திருமணத்திற்கு நோ சொல்லி வந்த இயக்குனர் விஜய் தற்போது யெஸ் சொல்லி விட்டதால், இவரின் திருமணத்திற்காக சில பெண்களை பெற்றோர் முடிவு செய்து வைத்திருப்பதாகவும். விஜய் பார்த்து முடிவு சொல்லிவிட்டால் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு மும்பாக கைவசம் உள்ள இரண்டு படங்களை முடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறாராம் விஜய்.