தனது காதலர் வருங்காலக் கணவர் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் அதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நயன் அவரை கூடவே இருந்து கவனித்துக்கொண்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெடி கோயிங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வரும் டிசம்பரில் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று செய்திகள் அடித்துக்கூறுகின்றன. இதற்கு அச்சாரமாக விக்னேஷ் சிவனின் பெயரில் ‘ரவுடி பிக்‌ஷர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி ‘நெற்றிக்கண்’படத்தைத் தயாரித்து வருகின்றனர். 

கொரியன் ரீமேக்கான இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கூடவே இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறாராம் நயன். அவர்களது அந்யோன்யத்தைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், ‘நாங்களும் எத்தனையோ மனைவிகள் கணவன்மார்களுக்கு பணிவிடை செய்வதைப் பார்த்துவிட்டோம். அவர்களையெல்லாம் விட உயரத்தில் நிற்கிறார் நயன்தாரா’என்கிறார்களாம்.