கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அரசன்' படத்தில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா, கொரோனா தொற்று காரணமாக இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவு குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தலை சிரித்த இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும், 'வெற்றி மாறன்' வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "நடிகர் நிதீஷ் வீராவை, 'புதுப்பேட்டை' படத்தில் நடித்து கொண்டிருக்கும் காலத்திலேயே தனக்கு தெரியும், தனுஷை வைத்து நான் படம் இயக்க உள்ள தகவலை அறிந்து வந்து என்னுடன் பேசினார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவல் நண்பர்கள் மூலமாக வந்தபோது, இன்னும் இரண்டு நாட்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வரும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை 6 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு .என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா என்கிற நோய் தொற்று கடந்த ஆண்டு தலை தூக்கிய போது, இது சாதாரண ஒன்று தான் என நானும் நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டு, நமக்கு நெருக்கமான பல இழப்புகள் நேரத்து வருகிறது. எனவே தயவு செய்து அனைவரும் முக கவசம் அணிவது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் முகக்கவசம் சரியாக போடவேண்டியதும் முக்கியம். பலர் மூக்கிற்கு கீழ் முகக்கவசம் அணிகிறார்கள் அதனால் எந்த பயனும் இல்லை நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. எனவே உரிய முறையில் மாஸ்க் அணிய வேண்டும்.

Scroll to load tweet…

இப்படி மாஸ்க் அணிவதால் கொரோனா தொற்றை 70 சதவீதம் கட்டு படுத்த முடியும் என ஆராச்சியில் தெரிய வந்துள்ளது. அதே போல் லேசான தொற்று இருக்கும் போதே, மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆக்சி மீட்டர் வைத்து செக் பண்ணும் போது, ஆச்சிஜன் அளவு குறைவாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவ மனையை அணுக வேண்டும் என கூறியுள்ளார். முகநூல் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.