தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் (vetrimaran), தற்போது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ. பைக் ஒன்றை வாங்கி உள்ளார்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெற்றிமாறன். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் (Polladhavan) படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் (Aadukalam) படத்தை உருவாக்கி வெற்றிகண்ட வெற்றிமாறன். இப்படத்துக்காக அவருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.
ஆடுகளம் படம் மூலம் தேசிய அளவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உருவெடுத்தார் வெற்றிமாறன். இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பின் இவர் இயக்கத்தில் விசாரணை (Visaranai) திரைப்படம் வெளியானது. விசாரணை கைதி எதிர்கொள்ளும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படம் தேசிய விருதையும் வென்று அசத்தியது.

பின்னர் தனுஷை வைத்து வட சென்னை (Vada Chennai), அசுரன் (Asuran) என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் விடுதலை (Viduthalai) படம் உருவாகி வருகிறது. இதில் சூரி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் (Vaadivaasal) படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது.

இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் வெற்றிமாறன் (vetrimaran), தற்போது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ. பைக் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த பைக்கின் விலை ரூ.17 லட்சமாம். அவர் பைக் வாங்கிய போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
