Asianet News TamilAsianet News Tamil

இயக்குநர் சங்கத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்?...இதுதாங்க ரிசல்ட்...

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போலவே இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியும் எதிர்ப்பும் அதிகமாகியுள்ளதால் அத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
 

director union election news
Author
Chennai, First Published Jul 11, 2019, 12:00 PM IST

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போலவே இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியும் எதிர்ப்பும் அதிகமாகியுள்ளதால் அத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.director union election news

நடிகர்கள் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ஜூலை 14ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எதிர்ப்பும் சங்கத்துக்குள் எழுந்தன. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்,கரு.பழனியப்பன்  உள்ளிட்டோர் அதை விமர்சித்திருந்தனர். இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்குப் பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா என விமர்சித்தார்.பாரதிராஜாவும், “தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்” என்று பாரதிராஜா விளக்கமளித்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.director union election news

ராஜினாமா செய்துவிட்டு பாரதிராஜா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒதுங்கியிருக்கப் போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. அந்தவகையில் இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், ஆகியோர் ஒரு அணியிலும் எஸ்.பி.ஜனநாதன்,கரு.பழனியப்பன்  ஆகியோர்  எதிரணியிலும் போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். இதில் ஜனநாதன்,கரு.பழனியப்பன் அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக உதவி இயக்குநர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios