கர்நாடகா இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா இறந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.சுபாஷ் காலமானர். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மணிரத்னம் அவர்களிடம் நாயகன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சுபாஷ். பின்பு நடிகர் பிரபு மற்றும் அமலா நடித்த 'கலியுகம்' படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்துவைத்தார். 

அதன்பின்னர் விஜயகாந்த் நடிப்ப்பில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான 'சத்ரியன் என்ற வெற்றி படத்தை இயக்கினார்.

சத்யராஜின் பிரம்மா, பிரபு நடித்த உத்தமபுருஷன்', பிரபுதேவாவின் 'ஏழையில் சிரிப்பில், '123' மற்றும் பார்த்திபன் நடித்த 'சுபாஷ் உள்பட பல வெற்றி படங்களை சுபாஷ் இயக்கியுள்ளார். 

மேலும் தல அஜித் நடித்த 'பவித்ரா' மற்றும் 'நேசம்' ஆகிய படங்களும் இவர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ஷாருக்கானின் சூப்பர் ஹிட் படமான 'சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, என்டேர்டைன்மெண்ட் , ஹவுஸ்புல் 3 ஆகிய பாலிவுட் படைகளுக்கு கதை, திரைக்கதை எழுதிய பெருமையும் கே.சுபாஷ் அவர்களுக்கு உண்டு என்பது குறிப்பிடதக்கது.