Asianet News TamilAsianet News Tamil

ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம் அடித்த அதிர்ஷ்டக்கார டைரக்டர்...

சுமார் இரண்டு மாதங்களுக்கு  முன்பே நமது இணையதளத்தில் எழுதியிருந்தபடியே 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக மிகமிக   உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடுவில் விஜய் படம், ஒரு தெலுங்குப்படம், மீண்டும் அஜீத் படம்  என்ற தேடலில் இருந்த சிவா இறுதியாக யு டர்ன் அடித்து சூர்யாவிடமே வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
 

director siva to commit two movies at a time
Author
Chennai, First Published Apr 7, 2019, 10:08 AM IST

சுமார் இரண்டு மாதங்களுக்கு  முன்பே நமது இணையதளத்தில் எழுதியிருந்தபடியே 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக மிகமிக   உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடுவில் விஜய் படம், ஒரு தெலுங்குப்படம், மீண்டும் அஜீத் படம்  என்ற தேடலில் இருந்த சிவா இறுதியாக யு டர்ன் அடித்து சூர்யாவிடமே வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது.director siva to commit two movies at a time

கடந்த சில நாட்களாகவே சிவா மீண்டும் அஜீத்தை வைத்து இயக்கப்போவதாக முரட்டு வதந்தைகள் நிலவி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் சிவா அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளார் என்று செய்திகள் உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, "இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே  நடைபெற்று வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக அஜித்துடன் படம் செய்து கொண்டிருந்ததால் இப்பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

'சிறுத்தை' படம் இயக்கும் போதே, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 2 படங்கள் இயக்குவதாக தான் சிவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படிதான்  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார் சிவா. இக்கதையில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் சில நாட்களில் இறுதியாகிவிடும்" என்று தெரிவிக்கிறார்கள்.director siva to commit two movies at a time

சூர்யாவுடனான படத்துக்கு அடுத்தபடியாக போனிகபூர் இரண்டாவதாக தயாரிக்கவுள்ள படத்தையும் விநோத்துக்குப் பதில் சிவாவே இயக்குவார் என்றும் அஜீத் தனது இரண்டாவது படத்தை விநோத்துடன் தொடர்வதை விரும்பவில்லை என்றும் சில செய்திகள் நடமாடுகின்றன. ஆக ஒரே நேரத்தில் இரு பெரும் குதிரைச் சவார்களுக்குத் தயாராகிவிட்டார் சிவா.

Follow Us:
Download App:
  • android
  • ios