பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்,  அஜித் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடித்து பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

இந்த படம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது.  இதனால் இயக்குனர் சிவா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்...  "அஜித் தல, அஜித் ரசிகர்கள், நயன்தாரா, ஜெகபதி பாபு, மற்றும் விசுவாசம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், மீடியா நண்பர்கள் சினிமா விரும்பிகள், குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், எனது குழுவினர், இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி.

 

இந்த படத்தை வெற்றிப் படமாக்க அருள்புரிந்த கடவுளுக்கும் நன்றி என இயக்குனர் சிவா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனரின் சிவாவின்,  இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.