’வீரம்’,வேதாளம்’, ‘விவேகம்’ என விஸ்வாசமாக அஜீத்துடன் தொடர்ந்து நான்காவது படமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இயக்குநர் சிவா ’ எனது அடுத்த படம் கண்டிப்பாக அஜீத்துடன் இல்லை. ஆகவே அவரது ரசிகர்களே நிம்மதிப் பெருமூச்சு விடுங்கள்’ என்று அறிவித்துள்ளார்.

சினிமாவில்  ஒரு துளி அசெளகர்யத்தைக்கூட சந்திக்கக்கூடாது என்ற முடிவில் கடந்த சில வருடங்களாகவே தனக்கு விஸ்வாசமாக இருக்கும் சிவாவின் இயக்கத்திலேயே அஜீத் தொடர்ந்து நடித்து வருகிறார். சிவா இயக்கிய நான்கு படங்களில் இரண்டு பழுதில்லை என்ற கணக்கில் ரசிகர்கள் இந்தக் கூட்டணியை ஓரளவு சகித்து வந்தாலும் கடைசியாக இவர்களது கூட்டணியில் வந்த ’விவேகம்’ படு ஃப்ளாப் ஆனதால், ‘தல டைரக்டரை மாத்துங்க’ என்று தொடர்ந்து கூவி வருகிறார்கள்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படவேலைகள் முழுமையடைந்த நிலையில், தெலுங்கு ஹீரோ ஒருவருக்கு கதை சொல்லி முடித்திருக்கும் சிவா, ‘இனி ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகே அஜீத் இருக்கும் பக்கமே திரும்புவேன்’ என்று அறிவித்து தல ரசிகர்கள் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார்.

இதே போல் ‘விஸ்வாசம்’ படம் குறித்த அப் டேட்கள் தராததற்கு பதிலளித்த சிவா, ‘நான் முகநூல், ட்விட்டர்,வாட்ஸ் அப் போன்ற எந்த வலைதளங்களிலும் இயங்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார்.