இயக்குனர் சிவாவின் படத்தில் நடிப்பதாக உறுதியளித்த நடிகர் சூர்யா அதற்கான எந்தவித சைகையும் காட்டாத காரணத்தால் இயக்குனர் செம கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது..

பசங்க, நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது எதற்கும் துனின்டவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்..இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். இந்தப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மாஸ் ட்ரெண்டாகி வருகிறது..இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது...இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட வெளியானது...சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் வாடிவசூலுக்கு முன்னர் சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாவுடன் சூர்யா கைகோர்க்க உள்ளதாக தகவல் சொல்கிறது...கன்னியாகுமாரி, ராமேஸ்வரம் என படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் ..பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது..அதோடு இந்த படத்தின் கதைக்களம் மீனவர்கள் சார்ந்தது என்றும் தெரிகிறது... இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் முன்னதாக கார்த்தியை வைத்து சிறுத்தை என்னும் ஹிட் கொடுத்த சிவாவுடன் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டது.... சூர்யாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவா பல வருடமாக காத்திருக்கிறார்.. சரி என சொல்லவிட்டு தற்போது சிவா படத்தில் நடிப்பது குறித்து சூர்யா எந்தவித சமிக்கையும் செய்யாமல் இருப்பது சிவாவை கடுப்பேற்றி உள்ளதாம்...இதனால் சூர்யாவுக்கு சொன்ன கதையை வேறு பிரபல நடிகர்களை வைத்து இயக்க சிவா முடிவெடுத்து விட்டாராம்... இங்கு வாய்ப்பே இல்லை என்றாலும் தெலுங்கு பக்கமாவது போவது என முடிவெடுத்துவிட்டாராம்..