director siddik missed vaigaipuyal vadivel

இரட்டை மொழிகளில் சக்ஸஸ்ஃபுல்லாக படம் இயக்கும் இயக்குநர்கள் அரிது. ஆனால் சித்திக் இதற்கு விதிவிலக்கு. அடிப்படை மலையாளம் என்றாலும் அவ்வப்போது தமிழ் பக்கம் வந்து அதிரிபுதிரி ஹிட் கொடுத்துவிட்டு போவார். அதிலும் மலையாளத்தில் பாக்ஸ் ஆஃபீஸை பதறடித்த தனது படத்தையே தமிழில் ரீமேக்கி ஹிட்டடிப்பார். 

தமிழுக்கு வரும்போது சித்திக்கின் ரைட் சாய்ஸ் ஹீரோ என்றால் அது ‘விஜய்’தான். அதேபோல் காமெடிக்கு கண்ணை மூடிக்கொண்டு அவர் டிக் செய்வது வைகைப்புயல் வடிவேலை. சித்திக்கின் படங்களில் செண்டிமெண்ட், காமெடி இரண்டும் தரமாய் இருப்பதோடு தலைதெறிக்க ஹிட்டடிக்கவும் வைக்கும். 

ஃப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் என அவரது மெகா ஹிட் படங்கள் மூன்றில் இரண்டில் விஜய் ஹீரோவாக இருக்க, மூன்றிலும் வடிவேலு இருந்தார். 

இந்த நிலையில் 2015-ல் மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் நயன்தாரா காம்பினேஷனில் சித்திக் கொடுத்த மாஸ் ஹிட் படம்தான் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. அதை தமிழில் ரீமேக்க முயன்றபோது சித்திக்கின் மனதில் ரஜினி, கமல் என்று மெகா ஹீரோக்கள் வந்து போயின ஆனால் சூழல் கைகொடுக்கவில்லை. 

அதனால் அழகு நாயகன் அர்விந்த்சாமியை இந்தப் படத்தில் கமிட் செய்தார் சித்திக். ரஜினி, கமல் அளவுக்கு மாஸ் இல்லை என்றாலும் அர்விந்த்சாமி க்ளாஸாக இருப்பார் என்பது சித்திக்கின் எண்ணம். ஷூட் துவங்கி மளமளவென மேக்கிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் ரஷ் போட்டுப் பார்த்த சித்திக் அர்விந்த்சாமி சரியான சாய்ஸ்தான் என்பதை உணர்ந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என கதை. அதில் மகள் கதாபாத்திரத்தின் மீனாவின் குழந்தை நைனிகா! என ஹாட் க்ரூ அமைந்திருக்கிறது. 

எல்லாமே சந்தோஷம்தான் சித்திக்கிற்கு, ஆனால் ஒரே ஒரு வருத்தம். அது காமெடிக்கு தன் ஆல்டைம் தமிழ் சாய்ஸான வைகை புயல் வடிவேலு இல்லையே எனும் வருத்தம்தான். 

சித்திக் - வடிவேலு காம்பினேஷன் என்றுமே மரணமாஸாக இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் பட காமெடியெல்லாம் காலத்துக்கும் அழியாத காமெடி சரித்திரமல்லவா. அந்த வருத்தம்தான் சித்திக்கிற்கு. ஆனாலும் தமிழ் பாஸ்கர் தி ராஸ்கலில் அவர் கமிட் செய்திருக்கும் ரமேஷ்கண்ணா - சூரி - ரோபோ சங்கர் கூட்டணி அவரை திருப்திப்படுத்தி இருக்கிறது என்றும் சந்தோஷப்படுகிறார். 
வடிவேலை எல்லோரும்தான் மிஸ் செய்கிறார்கள்.