Maamanithan : மாமனிதன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்த இயக்குனர் ஷங்கர், படத்தை பற்றியும், விஜய் சேதுபதியின் நடிப்பு பற்றியும் டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது 4-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ள படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். யுவனும், இளையராஜாவும் முதன்முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, இன்று உலகமெங்கும் இப்படம் ரிலீசாகி உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாமனிதன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், நேற்று இரவு இப்படத்தின் சிறப்பு காட்சி திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் மாமனிதன் படத்தை பார்த்து ரசித்தார். இதையடுத்து அவர் படத்தை பற்றியும், விஜய் சேதுபதியின் நடிப்பு பற்றியும் டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : “மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது. சீனு ராமசாமியின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மூலம் இது யதார்த்தமான கிளாசிக் படமாக வந்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் உணர்வுப்பூர்வமான இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது” என பாராட்டி உள்ளார்.
இதையும் படியுங்கள்...Arjun Kapoor : 48 வயது காதலியுடன் 37-வது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு பறந்த போனி கபூர் மகன் - வைரலாகும் போட்டோஸ்
