ponniyin selvan : ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளனர். முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால், இந்த வாரம் ரிலீசாக இருந்த காஃபி வித் காதல், பார்டர், காசேதான் கடவுளடா, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொன்னியின் செல்வன் படம் போட்டியின்றி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!

பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதன்படி அவர் கூறியிருப்பதாவது : “பொன்னியின் செல்வன் வசீகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான வரலாற்று படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார் மணிரத்னம். அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலைவணங்குகிறேன். ஏ.ஆர்.ரகுமானின் இசை இனிமையாக உள்ளது. 3 மணிநேர சூழ்ச்சிகள் நிறைந்த கதை கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘ஜென்டில்மேன் 2’ ஹீரோயின் நயன்தாரா... ஹீரோ யார் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு