பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடைபெற்ற கிரேன் விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் படப்பிடிப்பே சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 7 மாதத்திற்கு முடங்கியது. 

தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் இந்தியன் 2 படத்திற்கு 100 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்துவது சிரமம் என்பதால் ஷங்கர் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இருந்து வந்தார். மேலும்  அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது.ஆனால் பட்ஜெட் தொகையை குறைக்க வேண்டும் என ஷங்கருக்கு கட்டளை போட்டது. அதையும் ஏற்றுக்கொண்ட ஷங்கர் ரூ. 400 கோடியில் இருந்து ரூ. 220 கோடியாக பட்ஜெட்டை குறைத்துக் கொண்டார்.

ஆனால் லைகா நிறுவனம் இன்னும் சில கோடிகளை குறைக்க வற்புறுத்தியுள்ளது, அதற்கு ஷங்கர் சம்மதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இதனால் தயாரிப்பாளர் தரப்பிற்கும் ஷங்கருக்கும் இடையே சிக்கல் முற்றியுள்ளது. இந்நிலையில்   தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் கள்ம் காண்கிறார். தேர்தல் பணிகள் நிறைய இருப்பதால் படப்பிடிப்பு பணிகளை டிசம்பர் இறுதிக்குள் முடிக்குமாறு கமல்ஹாசன் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

இடையில் புதுமணப்பெண்ணான காஜல் அகர்வால் வேறு காதல் கணவருடன் தேனிலவில் இருக்கிறார். இந்த சிக்கல் எல்லாம் போதாது என்று புதிதாக கமல் வேறு கெடு கொடுத்துள்ளதால் ஷங்கர் உச்சகட்ட டென்ஷனில் உள்ளாராம். தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்றால் குறைந்தது 500 பேராவது வேண்டும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் திக்குமுக்காடுவதாக கூறப்படுகிறது.