அடிதூள் ஆரம்பமே அசத்தல்.. பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரம்மாண்ட இயக்குநரின் மகள்!
இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கார்த்தி - முத்தையா கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கொம்பன், இந்த கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘விருமன்’ என்ற படம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ‘அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக’ என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து ஷங்கர் மகள் அதிதியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அத்துடன் அவரை வரவேற்று ட்விட்டரில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.