*பெரியாரை அவமதித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்! என்று எழுந்திருக்கும் விவகாரத்தில் ‘முடியாது’ என்று அதிரடி பண்ணிய ரஜினிகாந்தை சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார் இயக்குநர் பேரரசு. ’இந்து தெய்வங்களை அநாகரிகமாக பல காலமாக விமர்சித்தவர்கள் முதலில் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும்.’ என்று நறுக்கென பதிவை தட்டிவிட்டிருக்கிறார் சோஷியல் மீடியாவில்.  இது பெரியளவு இண்டஸ்ட்ரியில் கவனம் ஈர்த்திருக்கிறது. (அருவாவ தீட்டிட்டாப்ல பேரரசு)

*இனி வெப்சீரிஸுக்குதான் பெரிய காலம் காத்திருக்கிறது! என்று சினிமாத்துறையின் இயக்குநர் ஆளுமைகள் வலியுறுத்தி பேசி வருகின்றனர். பெரிய நட்சத்திரங்களும் இந்த தளத்தை நோக்கி வரத்துவங்கி விட்டனர். இந்த நிலையில் சமந்தாவோ தனது முதல் வெப்சீரிஸான ‘தி மேமிலி மேன் 2’ வில் நடித்து முடித்தேவிட்டார். (சமந்து சமர்த்துதான் போ)

*’எனது சைக்கோ படமானது, கொலைக்கள படம். எனவே குழந்தைகள் பயப்படுவார்கள். அதிலும் குறிப்பாக நான்கைந்து காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். எனவே குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்.’ என்று வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். (’இந்தப் படத்தை பார்க்காதீங்க!’அப்படின்னு சொல்றதே படத்துக்கு செம்ம ப்ரமோஷன் தான்)

*தல அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் யார்? என்பது பெரிய சுற்றலாகவே இருந்தது. நயன், அனுஷ்கா, யாமி கவுதம், இலியானா என்று ஏகப்பட்ட பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் இப்போது காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த பாலிவுட் பொண்ணு ஹூமா குரேஷி நடிக்கிறார் என்று உறுதியாகியுள்ளது. (காலான்னா கருப்பு. அஜித்னா வெள்ள)

*இந்தியன் -2 படத்தை எடுத்து முடித்த வரையில் போட்டுப் பார்த்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.  அவரே அசந்துட்டாராம். முதல் பாகத்தினை விட இந்தப் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் ஆக்‌ஷன் மற்றும் நடிப்பு  ரெண்டுமே திரையில் தெறிக்கிறதாம்.  இதை கமலிடம் பகிர்ந்து கொண்ட ஷங்கர் ‘மிரட்டியிருக்கீங்க் சார். அரசியல் பொறுப்பு உங்களுக்குள்ளே வெறித்தனமா இறங்கியதோட பிரதிபலிப்பு இது!’ என்றாராம். 
(வெறித்தனம் குறையுறதுக்குள்ள தலைவன் இருக்கிறான்! படத்தை ஆரம்பிங்க கமல்)