Asianet News TamilAsianet News Tamil

செல்வராகவனின் இரண்டாவது மனைவி கீதாஞ்சலி இந்த நடிகையின் சகோதரியா..! இந்த விஷயம் தெரியாம போச்சே..?

திரைப்படங்கள் இயக்குவதில், தொடர்ந்து வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவர்... பிரபல நடிகர் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன். இவருடைய இரண்டாவது மனைவி பற்றி இதுவரை யாரும் பெரிதாக அறிந்திடாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

director selvarahavan wife geethanjali is this actress sister shocking truth
Author
Chennai, First Published Jun 11, 2020, 5:34 PM IST

திரைப்படங்கள் இயக்குவதில், தொடர்ந்து வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவர்... பிரபல நடிகர் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன். இவருடைய இரண்டாவது மனைவி பற்றி இதுவரை யாரும் பெரிதாக அறிந்திடாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை ஹன்சிகாவுக்கு தொழிலதிபருடன் திருமணமா? யார் அவர்... உண்மையை உடைத்த நடிகை!
 

இயக்குனர் செல்வராகவன், அவருடைய சகோதரர் தனுஷை வைத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தை இயக்கினார். இளவட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

director selvarahavan wife geethanjali is this actress sister shocking truth

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு காதலும் மலர்ந்தது. பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மேலும் செய்திகள்: என்னை ஆச்சரியப்படுத்திய மனிதர் ஜெ.அன்பழகன்! மனம் உருக இரங்கல் தெரிவித்த ஜெயம் ரவி!
 

director selvarahavan wife geethanjali is this actress sister shocking truth

இதை தொடர்ந்து, தனுஷை வைத்து இவர் இயக்கிய மயக்கம் என்ன படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது. இந்த தம்பதி தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: பண கஷ்டத்தால் ஆபாச நடிகையாக மாறிய விளையாட்டு வீராங்கனை..! அதிர்ச்சி புகைப்படங்கள்..!
 

director selvarahavan wife geethanjali is this actress sister shocking truth

இந்நிலையில், இதுவரை கீதாஞ்சலி பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கீதாஞ்சலி பிரபல காமெடி நடிகர் மோகன் ராமனின் சகோதரர் பி.எஸ்.ராமனின் மகளாம். அப்படி என்றால் காமெடி நடிகை வித்யூலேகா ராமனின் சகோதரி என்கிற தகவல் தெரியவந்துள்ளது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios