’புதுப்பேட்டை’படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நான் மறுபடியும் சொதப்பிவிடுவேன் என்று தனுஷ் பயப்படுவதால் அப்படம் எடுக்கும் திட்டத்தை சுத்தமாகக் கைகழுவி விட்டேன்’ என்று அறிவித்திருக்கிறார் செல்வராகன். ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கண்டிப்பாக திரைக்கு வரும் என்ற எச்சரிக்கையையும் கூடவே கொடுக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுமாரான தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன்.ஆனால் பெரும் சோம்பேறி. இவரது முக்கியமான படங்கள் என்று போற்றப்படும் ‘புதுப்பேட்டை’,’ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டுமே சரியாக ஓடாமல் இரு பெரும் தயாரிப்பாளர்களை அடியோடு சாய்த்தவை.

அந்த வரலாறு தெரியாமல் அவரிடம் வலைதளப்பக்கங்கலில் ‘ ’புதுப்பேட்டை’, ’ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவனும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறி வந்தார். இந்த நிலையில், அவர்  லேட்டஸ்டாக அளித்த பேட்டியில்,..புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்’ என்கிறார்.

இவரது இயக்கத்தில் சூர்யா,சாய் பல்லவி,ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ள நிலையில் அதன் வெற்றி தோல்வியைப் பொறுத்தே செல்வராகவனின் அடுத்த படம் அமையும் என்பதே நிதர்சனம்.