நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் ரீ-என்ட்ரிக்கு பிறகு, தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் ரௌண்டு கட்டி நடித்து வருகிறார். ஒவ்வொரு வெற்றி படத்திற்கும் அவரின் சம்பளம் உயர்ந்து வருவதாக ஒரு பேச்சு கோலிவுட் திரையுலகில் அடிபட்டு வருகிறது.

நடிகை ஜோதிகா, '36 வயதினிலே' படத்தின் ரீ-என்ட்ரிக்கு பிறகு, தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் ரௌண்டு கட்டி நடித்து வருகிறார். ஒவ்வொரு வெற்றி படத்திற்கும் அவரின் சம்பளம் உயர்ந்து வருவதாக ஒரு பேச்சு கோலிவுட் திரையுலகில் அடிபட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடைசியாக ஜோதிகா நடிப்பில் வெளியான, 'ஜாக்பாட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை என்றாலும், தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோ.

பிரபல மலையாள இயக்குனர், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தியுடன் இணைந்து, பெயரிடப்படாத படம் ஒன்றிலும், அதேபோல் கதாநாயகிக்கு முக்கிய துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியது. மேலும் இப்படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.