நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கி சர்ச்சையான இயக்குனர் என பெயர் எடுத்தவர் சந்தோஷ் ஜெயகுமார்.

இவர் அடுத்ததாக இயக்க உள்ள அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானதோடு இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.  Etcetera எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது நடிகர் அரவிந்த் சாமி மட்டுமே நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.