உயிர், மிருகம், சிந்துசமவெளி, கங்காரு, உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சாமி. தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவும் ஆயத்தமாகி உள்ளார்.  இந்நிலையில் இவர் ஓர் இரு தினங்களுக்கு முன் விஜய் பற்றி பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் கைகுலுக்கி விட்டு, டெட்டால் ஊற்றி கைகழுவிய தாக குற்றம்சாட்டியிருந்தார் சாமி.  இதனால் விஜய் சினிமாவில் நடிப்பது போன்று, வெளியிலும் நடிக்க வேண்டாம் என இயக்குனர் சாமி வன்மையாக தன்னுடைய கண்டனங்களை தெரிவித்தார்.

மேலும் அரசியலுக்கு வருவதற்காகவே விஜய் இதுபோன்ற செயல்களை செய்வதாகவும், தெரிவித்திருந்தார். இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகிறது. 

அஜீத்தின் ரசிகர்கள் வாய்க்கோ இது அவள் கிடைத்தது போல்... என்பதால்...  இந்த விஷயத்தை பற்றி அதிகம் பேச துவங்கி விட்டனர். 

ஆனால் விஜய் ரசிகர்களோ... கைகழுவியது ஒரு குத்தமா என்பதுபோல் விஜய்யின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறும் விதமாக சில பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.  அதாவது கைகுலுக்கிய பின்னும் கட்டி அணைத்த பின்னும், தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள கை கழுவுவது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் என்றும், இதனை செய்வதில் தீண்டாமை என்கிற வார்த்தை அடங்காது என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் இதுவே மற்ற நடிகர்கள் இதுபோல் செய்திருந்தால் அது பெரிதாகப் பேசப்படாது என்றும்,  விஜய் இப்படி செய்ததை பெரிய குற்றமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்கிற சில வாதங்களையும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.