பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானத்தில் இருந்து அனைத்து பிரபலங்களை விட ரசிகர்களால் மிகவும், கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டவர்  நடிகை ஓவியா.

இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். பலர் சேவ் ஓவியா என தங்களுடைய ஆடைகளில் எழுதி ஓவியா விற்காக ஓட்டுகள் சேகரித்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை என பல பெயர்களில் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டும் வருகிறது.

இந்நிலையில் "டார்லிங்", "எனக்கு இன்னொரு பேரு இருக்கு" ஆகிய படங்களை இயக்கிய  பிரபல இயக்குனர் சாம் ஆண்டன் 'நான் ஓவியா புரட்சி படையின் தலைவர்' என கூறியுள்ளார். 

ஓவியாவின் காதலை நிராகரிக்கும் ஆரவ்வை விமர்சித்துள்ள அவர்,  'ஓவியா ஆர்மி தற்கொலை படை தலைவர் நான்தான்' ஓவியாவிற்காக தற்கொலை கூட செய்துகொள்ள தயார் என்பது போல தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாம் ஆண்டன் அதிரடி கருத்தை  தெரிவித்துள்ளார்.