பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ள ஆர்.வி உதயகுமாருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

90களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ஆர்.வி உதயகுமாரும் ஒருவர். சின்னக்கவுண்டர், எஜமான், பொன்னுமணி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி உள்ளார். சின்னக்கவுண்டரின் படத்தின் மாபெரும் வெற்றியை பார்த்த ரஜினி அதே போல் தனக்கும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டார். இதை தொடர்ந்து ரஜினியை வைத்து எஜமான் என்ற படத்தை ஆர்.வி உதயகுமார் இயக்கினார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 

ஆர்.,வி உதயகுமாரின் படங்கள் ஹிட் ஆனாலும் மறுபுறம் சர்ச்சையும் சேர்ந்தே எழுந்தது. குறிப்பிட்ட உயர் சாதியினரை உயர்வாக காண்பித்தல், பெண்ணடிமைத்தனம், ஒடுக்கப்பட்ட மக்களாஇ காண்பிக்கும் விதம் ஆகியவை சர்ச்சையாகின. சமீபத்தில் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு விமர்சனம் எழுந்த போது, ஆதிக்க சாதியை தூக்கிபிடித்த ஆர்.வி உதயகுமாருக்கு வராத விமர்சனங்கள் ஏன் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு வருகிறது என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர். 

மயில்சாமி கடைசியாக நடித்த Glassmates.. பிப்ரவரி 23-ம் தேதி இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸாகிறதா?

இந்த நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ள ஆர்.வி உதயகுமாருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. என் சுவாசமே என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்.வி உதயகுமார் பெண்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விழாவில் பேசிய அவர் “ பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகின்றனர். பெண்கள் தங்களை தாங்களே அவுத்துபோட்டு காட்டுகின்றனர். பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று அவர்களை பார்த்து தான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் உடல் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்று பெண்கள் ஆராய்ச்சி செய்வார்கள் போல.. 

தமிழ் சினிமாவை கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் அவர்களாகவே தங்கள் முழு உடலும் தெரியும் படி வீடியோ எடுத்து போடுகின்றனர். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும். தமிழகர்களுக்கு மலையாளிகளை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு தான் தமிழர்களை பிடிக்காது. 

மலையாளிகள் எப்படி நல்ல படங்களை எடுப்பதில் வல்லவர்களோ அதே போல் பிட் படங்களை எடுப்பதிலும் வல்லவர்கள். அவர்கள் தான் அதனை முதன்முதலில் தொடங்கி வைத்தவர்கள். எந்த ரீலில் பிட் வரும் என்று கேட்டுவிட்டு, அதை மட்டும் பார்த்து விட்டு எழுந்து போனவர்கள் எல்லாம் உண்டு” என்று தெரிவித்தார்.

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..

பெண்கள் குறித்து ஒரு மூத்த இயக்குனர் பேசியிருக்க கூடாது என்றும் அவரின் இந்த பேச்சை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கண்டித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.