Asianet News TamilAsianet News Tamil

செம கியூட்... வாத்தி கம்மிங் பாடலுக்கு அழகாய் ஆட்டம் போட்ட இயக்குநர் மகள்...!

இந்நிலையில் ஆடை பட இயக்குநரும் மாஸ்டர் படத்தில் பணியாற்றியவருமான ரத்னகுமாரின் மகள் குரலினியாள் செம்ம கியூட்டாக ஸ்டெப் போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். 

Director Rathnakumar Daughter Kuraliniyal Vaathi Coming Dance Going Viral
Author
Chennai, First Published May 19, 2020, 4:23 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.  கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படப்பிடிப்பில் நடித்துள்ளது. 

Director Rathnakumar Daughter Kuraliniyal Vaathi Coming Dance Going Viral

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Director Rathnakumar Daughter Kuraliniyal Vaathi Coming Dance Going Viral

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

குறிப்பாக தளபதி விஜய் மாஸ் ஸ்டெப் போட்ட வாத்தி கம்மிங் பாடல் டிக்-டாக்கில் செம்ம பிரபலம். பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக்கில் நடனமாடி அசத்தியுள்ளனர். இந்நிலையில் ஆடை பட இயக்குநரும் மாஸ்டர் படத்தில் பணியாற்றியவருமான ரத்னகுமாரின் மகள் குரலினியாள் செம்ம கியூட்டாக ஸ்டெப் போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

மாஸ்டர் பட அப்டேட் குருவான ரத்னகுமாருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாஸ்டர் ஷூட்டிங் ஆரம்பித்தது முதல் தற்போது படத்திற்கான போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் வரை அவ்வப்போது தளபதி பேன்ஸுக்கு சுவாரஸ்யமான தகவல்களை வாரி வழங்கி வருகிறார். தற்போது லாக்டவுன் நேரத்தில் தனது செல்ல மகளை வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடவைத்து ரத்னகுமார் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios