director ranjit fight fasting protest against sterlite

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இது சினிமா தொடர்புடையவர்களால் நடத்தப்படுகிற போராட்டம் அல்ல என்று ஏற்க்கனவே அறிவித்துள்ள, பா.ரஞ்சித். தான் அங்கம் வகிக்கும் தமிழ், கலை, இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் சார்பில் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது காவல்துறை மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை எதிர்க்கும் வகையில் பலர் கைகளில் பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் ராஜூ முருகன் உள்ளிட்ட பிரபலகளும் கலந்துக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்து வருகின்றனர்.