கொரோனா பிரச்சனை காரணமாக மே 3ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து பசியாறி வந்த கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை உணவாவது கிடைக்குமா? என்று பலரும் சாலைகளில் காத்திருக்கும் நிலையில், இளம் பெண்கள் சிலர் வரிசையில் நிற்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

அந்த போட்டோவை பார்த்து ஏதோ மாளிகைக் கடை வாசலிலோ, காய் கறி கடை வாசலிலோ காத்திருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், சரக்கு வாங்குவதற்காக மதுக்கடை முன்பு மணிக்கணக்கில் காத்துகிடக்கின்றனர். அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள போதும், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்  சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

ஏதோ பல நாள் பட்டினி கிடந்தவன் விருந்திற்கு காத்திருப்பதை போன்று மதுக்கடைகள் முன்பு ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வரிசையில் காத்திருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில இடங்களில் போலீசார் தடி அடி நடத்தும் அளவிற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தது. 

மதுக்கடை வாசலில் காத்திருந்த நீண்ட வரிசையில் பல இளம் பெண்களும் அடங்குவார். சரக்கு வாங்குவதற்காக  கியூவில் காத்திருக்கும் வீடியோக்களும், போட்டோக்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய்சேதுபதி ஒரு “தெலுங்கர்” என வீடியோ போட்டு உலகிற்கே சொன்ன கமல்....!

அதில், யாரு ஒயின் ஷாப் வரிசையில் நிற்கிறார்கள் என்று பாருங்கள்? குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களை காக்க வேண்டும் என்றும் இப்போதும் பேசி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.