பிரபல இயக்குனர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ள தகவல், திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பாலிவுட் பட இயக்குனர் ரஜத் முகர்ஜி, இவர் நடிகர் விவேக் ஓபராய், ஊர்மிளா, சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பிரபலங்களை வைத்து படம் இயக்கி வெற்றி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர். 

ரஜத் முகர்ஜி கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான உரிய சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்நிலையில் இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் இவருக்கு அறுவை சிகிச்சை ஒன்றும் நடந்துள்ளது.

ஒருவழியாக அதில் இருந்து நலமுடன் வீடு திரும்பிய இவருக்கு மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலி வந்ததாக அவர் கூறியதை தொடர்ந்து அவரை அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அழைத்து சென்றனர். 

மருத்துவமனையில் அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ரஜத் முகர்ஜியின் மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.