director rajasimha talk about sucide attempt
பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா, சினிமாவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமா அதிக அளவு தூக்கு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. குறிப்பாக நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.
மேலும் கடந்த நடிகை நித்யா மேனன், மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் இவர், மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், பின் இவர் தங்கி இருந்த விடுதியில் வேலைசெய்தவர்கள் இவரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்ததாக கூறப்பட்டது. 
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் தற்போது நலமாக இருக்கிறேன். உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்துவிட்டேன் அவ்வளவு தான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தனக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்றும், மூன்று நாட்களில் நான் ஹைதராபாத்துக்கு திரும்பிவிடுவேன், அதன் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜசிம்ஹா.
