Asianet News TamilAsianet News Tamil

‘நான் அடித்துவிடுவேனோ என்று பயந்தார் ரஜினி’...ஆர்.வி.உதயகுமார் அதிர்ச்சி ஃப்ளாஷ்பேக்

 ’தொடர்ந்து குப்பைப்படங்களாகவே வருகிற சூழலில், எப்படிப்பட்ட குப்பைப்படமாக இருந்தாலும் அதை இரண்டரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தே தீரவேண்டிய பத்திரிகையாளர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது’ என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

director r.v.udhayakumar's flashback on rajini
Author
Chennai, First Published Oct 29, 2018, 11:46 AM IST

’தொடர்ந்து குப்பைப்படங்களாகவே வருகிற சூழலில், எப்படிப்பட்ட குப்பைப்படமாக இருந்தாலும் அதை இரண்டரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தே தீரவேண்டிய பத்திரிகையாளர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது’ என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

இயக்குநர் எஸ் .விஜயசேகரனின் இயக்கத்தில் உருவான ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலை லீ மேஜிக் லேண்டர்ன்  தியேட்டரில் நடைபெற்றது.இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போஸ்டரை வெளியிட, இயக்குநர் தளபதி அதனை பெற்றுக் கொண்டார். அப்போது இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த விழாவில் பேசிய சிலர் #MeToo குறிப்பிட்டார்கள். இது என்ன #MeToo..? ஏ டூ..? பி டூ..? இது என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே எனக்குப் புரியவில்லை.director r.v.udhayakumar's flashback on rajini

நான் படங்களை இயக்கிய காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் எனக்கு வந்ததில்லை. காரணம் எனக்கு ரொம்பவே கோபம் வரும். கோபம் வந்தால் யாராக இருந்தாலும் பட்டென்று அடித்துவிடுவேன். நல்லா நடிக்கலைன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும்.. படப்பிடிப்புத் தளத்தில் சில நடிகைகளை இதுபோல் அடித்திருக்கிறேன். இதனாலேயே எந்த நடிகையும் கடைசிவரையிலும் என் பக்கத்திலேயே வர மாட்டார்கள்.

‘பொன்னுமணி’ படத்தின் ஒரு காட்சியில் சவுந்தர்யாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட 11 டேக்வரைக்கும் போயும் நான் எதிர்பார்த்ததுபோல நடிப்பு வரவில்லை. ரொம்பவே கோபம் வந்து சவுந்தர்யாவை அடித்துவிட்டேன். அடித்த வேகத்தில் அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டார். பின்பு சட்டென எழுந்து சகஜம் போல இருந்தார். நானும் கொஞ்சம், அப்படி இப்படி இருந்தேன். ஆனால் நான் அடித்த வேகத்தில் சவுந்தர்யாவின் கன்னம் வீங்கிவிட்டது. இதைப் பார்த்த நடிகர் கார்த்திக் எனக்குப் பதிலாக பேக் அப் என்று சொல்லிவிட்டார். இதுபோல் செய்தால் எந்தப் பெண் என் பக்கத்தில் வருவார்..?director r.v.udhayakumar's flashback on rajini

என்னுடைய இந்தக் கோபம் பற்றி யாரோ ரஜினி ஸாரிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் நானும் சேர்ந்து படம் செய்யலாம் என்று பேசினோம். ‘நாம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணணும் ஸார்’ என்றார் ரஜினி. ‘நானும் சரிங்க ஸார். செய்வோம்’ என்றேன். ‘உங்களுக்கு எந்த மாதிரியான தயாரிப்பாளர் வேணும்?’ என்றார்.

நானும் ஏவி.எம்., விஜயா-வாஹினி, சத்யா மூவிஸ் மாதிரி பெரிய நிறுவனங்களை சொன்னேன். ‘சரி.. உங்க விருப்பப்படியே செய்வோம்’ என்றார். பின்பு, ‘ஸார் உங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப கோவப்படுவீங்களாம்.. அடிச்சிருவீங்கன்னுல்லாம் சொல்றாங்களே..?’ என்றார். நானும், ‘ஆமாம் ஸார்.. நல்லா நடிக்கலைன்னா எனக்குக் கோவம் வரும். பட்டுன்னு அடிச்சிருவேன்’ என்றேன். உடனே ரஜினி ‘என்னையெல்லாம் அடிச்சிராதீங்க ஸார்’ என்றார் பட்டென்று..! நானும் சிரித்துவிட்டேன்..!

நான் வரி விலக்கு அளிக்கும் கமிட்டியில் இருந்தபோது அதற்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை. சினிமாக்காரனான என்னாலேயே பத்து நிமிடம்கூட அந்தப் படத்தைப் பார்க்க முடியலை. அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான்..? அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்..? இந்த நேரத்தில் எல்லாபடங்களையும் பார்த்தே தீரவேண்டிய பத்திரிகையாளர்களாகிய உங்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது’ என்றார் உதயகுமார்.

Follow Us:
Download App:
  • android
  • ios