என்ன மாதிரி படமா இருக்கும்? புதிய கதைக்களத்தோடு களமிறங்கும் "கிறுக்கல் நாயகன்" - TEENZ First Look இதோ!
TEENZ Movie First Look : தமிழ் சினிமாவில் தனக்கென புதிய பாதை அமைத்து, அதில் பயணிக்கும் கிறுக்கல் நாயகன் தான் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான இரா. பார்த்திபன்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அவருடைய பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, அதன் பிறகு கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் இரா. பார்த்திபன்.
இயல்பான கதைக்களத்தை தாண்டி, பார்த்திபனின் திரைக்கதைக்கு ஒரு தனி மொழி உண்டு. எதார்த்த வசனங்கள் ஒருபுறம் என்றால், அவருக்கே உரித்தான சிக்கல் வசனங்களும் அவருக்கு சபாஷ் பெற்றுத்தரும். கடந்த 33 ஆண்டுகால சினிமா பயணத்தில் (இயக்குனராக) இவர் மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "இரவின் நிழல்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தை அணுகுவதில் இவருக்கு இணை இவரே என்று கூறும் அளவிற்கு புதுமைகளை தனது படத்தில் புகுத்தி வெற்றிகண்ட இயக்குனர் இவர். நடிகராக 40 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் பயணித்து வருகின்றார் பார்த்திபன், அந்த வகையில் இப்பொது தனது புதிய படத்தோடு களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கு TEENZ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் பார்த்திபன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான படத்தொகுப்பு பணிகளை ஆர். சுதர்சன் மேற்கொண்டுள்ளார். சுதர்சன் ஏற்கனவே பார்த்திபனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் TEENZ என்று புத்தம் புதிய படம் குறித்த தகவல்கள் இப்பொது வெளியாகியுள்ளது. இந்த படம் திகில் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலக புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் இந்த படத்தின் First Look வீடியோவை வெளியிட்டுள்ளார். இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டுள்ளார்.